free website hit counter

தற்போது நடைபெற்று வரும் G.C.E.சாதாரண தர பரீட்சையின் போது இரண்டு பரீட்சை நிலையங்களில் கண்டறியப்பட்ட முறைகேடுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யவுள்ளது.

வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்காக, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் மீட்சி வேலைத்திட்டங்கள் உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், அதன் விளைவாக 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கான பயணம் ஆரம்பமாகியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தமது கட்சி இன்னமும் நம்புவதாகவும் ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடு மாறுபட்டதாக இருப்பதாக கட்சியின் தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (மே 08) அறிவித்தது.

தாதியர் மற்றும் பல சுகாதார சேவை பணியாளர்களின் ஓய்வு வயது 61 ஆக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஏப்ரல் 2024 இல் 9.6% அதிகரித்து 5.43 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …