2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாக இடைக்கால நியமக் கணக்கு மட்டுமே சமர்ப்பிக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.
தீவின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று (08) முதல் அடுத்த சில நாட்களுக்கு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் 44,000 வாகனங்கள் உள்ளூர் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு (UTUJC) தமது தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தத்தை ஆரம்பித்து முப்பத்தைந்து நாட்கள் கடந்துவிட்டன, இது முழு பல்கலைக்கழக அமைப்பையும் முடக்குகிறது என்று UTUJC இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்தார்.
ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவை இலங்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.