2025 ஜனவரி முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரச சேவை சம்பள முரண்பாடுகள் தொடர்பான நிபுணர் குழு இன்று அறிவித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனங்கள் தற்போது அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொதுமக்களின் அணுகலுக்குக் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
தற்போது தனித்து செயற்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் மீண்டும் கட்சிக்கு வர நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வறுமையை இல்லாதொழிக்கும் திட்டத்துடன் நாட்டைக் கைப்பற்றும் என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட குரங்கு அம்மை (Monkeypox) நோய் தொற்றுக்கு இலங்கை சிறப்பாக தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹெராவை அடையாளப்படுத்தும் 205 மில்லிமீற்றர் கொண்ட உலகின் மிக நீளமான முத்திரை, இலங்கை தபால் திணைக்களத்தினால் செவ்வாய்க்கிழமை (20) வெளியிடப்பட்டது.
காலாவதியாகாத கனரக வாகனம் உள்ளிட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் இவ்வருட இறுதிக்குள் இரத்துச் செய்யப்படுவதுடன், புதிய அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். என்றார்.