சமகி ஜன பலவேகயவின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தனது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (29) பிற்பகல் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களிடம் கையளித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் “ரணிலுடன் இணைந்து நாட்டை வெல்ல ஐந்தாண்டுகள்” என்ற தலைப்பிலான ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
வடமாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் அதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (28) லேசான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி 24% முதல் 35% வரை சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்றும், அத்துடன் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தை மாற்றியமைப்பதன் மூலம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி மீண்டும் ஏற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.