இந்த வாரம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்காளர்கள் தமது கைத்தொலைபேசிகளை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பாடுபடுவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் குழுக்களுக்கு தான் ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை என சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளம் ரூபா 21,000 என பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று கையொப்பமிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான 10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் விநியோகம் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு 50 ரூபா கொடுப்பனவுடன் நாளாந்தம் 1,350 ரூபாவை நாளாந்தம் வழங்குவதற்கு சம்பள சபையில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2025 முதல் அமுலுக்கு வரும் வகையில் மஹாபொல புலமைப்பரிசில் ரூ.7,500 ஆகவும், பர்சரி உதவித்தொகையை ரூ.6,500 ஆகவும் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.