இலங்கையின் முதன்மை எரிவாயு விநியோகஸ்தர் லிட்ரோ கேஸ் லங்கா தனது உள்நாட்டு LP எரிவாயு சிலிண்டர்களின் விலையை இன்று (மே 03) நள்ளிரவு முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது.
இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு (GOR) 2024 மார்ச் இறுதிக்குள் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
இன்று (01) காலை கொட்டகலை பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ரூபா 1700 ஆக உயர்த்துவதாக அறிவித்தார்.
நேற்றிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டதன் எதிரொலியாக 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் சில்லறை விலையை குறைக்க சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சந்தி மற்றும் சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் பிச்சைக்காரர்களுக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.