எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதீய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) லோக்சபா தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பெற்றதற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்தார்.
2023 (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் விடைத்தாள் மீள் திருத்தலுக்கான விண்ணப்பங்கள் இன்று (ஜூன் 05) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மின்சார நுகர்வோர் கட்டண திருத்த யோசனையை இறுதி செய்வதற்கு இலங்கை மின்சார சபையுடன் (CEB) திங்கட்கிழமை (ஜூன் 3) கலந்துரையாடல் இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று (ஜூன் 4) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் செவ்வாய் (ஜூன் 04) மற்றும் புதன்கிழமை (ஜூன் 05) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.