இலங்கைக்கு SDR 254 மில்லியனை (சுமார் 336 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பெற அனுமதிக்கும் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ் இரண்டாவது மதிப்பாய்வை நிறைவு செய்வதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்திற்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தனிப்பட்ட வெற்றி தோல்விகளை மாத்திரம் தவிர்த்து நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாக அமையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக அதிக ஆபத்துள்ள டெங்கு வலயங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.