அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு சமீபத்தில் விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என்று புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் கூறுகிறார்.
ஊரடங்கு ஒக்டோபர் 1 வரை நீடிப்பு
அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளிப்புற பொறிமுறை அவசியமற்றது: ஜயநாத் கொலம்பகே
எமது உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்தவொரு தருணத்திலும் வெளிப்புற பொறிமுறை அவசியமற்றது என்று வெளிவிகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இன அழிப்பு தொடர்பில் உண்மையை அறியும் குழுவை ஐ.நா. நியமிக்க வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடிதம்!
இன அழிப்புத் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் பணிக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.
24 மணி நேரத்தில் 800இற்கும் அதிகமானோர் கைது
தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 816 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு திறக்கப்படுமா?
நாட்டினை எதிர்வரும் 21ம் திகதி திறப்பதா அல்லது ஊரடங்கை நீடிப்பதா என்பது தொடர்பான இறுதி முடிவு இன்று வெளியாகலாம் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பன்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தாக்குதல் அச்சுறுத்தல்
பன்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.