free website hit counter

இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின்  முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. சுமார் 30 நிமிடங்கள் மாத்திரம் நீடித்த இந்தச் சந்திப்பில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளடங்கிய எட்டுப் பேர் கலந்து கொண்டனர். தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி என்ற ஐந்து கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். தமிழரசுக் கட்சிக்குள்ளேயே பல பிரிவுகள், பல கோணத்துப் பயணம். நிலைமை அப்படியிருக்க, தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றாக அழைத்துப் பேசுதல் என்பது ஆச்சரியமூட்டும் செய்திதான்.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) விடுத்த வேண்டுகோளை இங்கிலாந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் நிராகரித்துள்ளது.

நாளை (ஜூன் 24) நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ‘கருணா அம்மான்’ என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளார்.

கொவிட் -19 தொற்றுநோய்களின் போது தகனங்களை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரினார்.

வவுனியாவில் இருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் நேற்று இரவு 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …