free website hit counter

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின் அவர் டெல்லிக்கு விஜயம் செய்யும் முதல் பயணம் இது.

தமிழகத்தில் கடுமையாகத் தாக்கம் செலுத்திய கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில், 50 சதவீத பேருந்துகளை இயக்குவது தொடர்பில் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தலைநகரான டெல்லி ஊரடங்கு கட்டுப்பாடுகளால் முடங்கிப்போனது. தற்போது பாதிப்பு குறைந்துவரும் நிலையில் அங்கு இன்று முதல் சில கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய தேவைகளை மக்கள் வெளியே நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகிவருகிறது.

மும்பை மாநகரத்திற்கு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் அங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி கடைவீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அது அடுத்தடுத்த கடைகளைக்கும் பரவியதால் பதற்றம் நிலவியது.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு உட்பட ஜிஎஸ்டியின் பல கட்டமைப்பு சிக்கல்கள் இன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன, ஆனால் அரை நாள் கூட்டமாக நிகழும் இதில் போதுமான முடிவுகள் எடுக்கப்படுமா என்பன தெளிவாக இல்லை.

கொரோனா தொற்றின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவருகிறது.

மற்ற கட்டுரைகள் …