free website hit counter

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த சூழலில், ஏராளமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ,50,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு, கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து அரசின் நிவாரண உதவி பெற்றவர்களுக்கு இது பொருந்தாது என்றும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் 4ஆம் திகதி இரவு 8 மணி முதல் டிசம்பர் 5ஆம் திகதி இரவு 8 மணி வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம்

மற்ற கட்டுரைகள் …