free website hit counter

கலங்கரை விளக்கங்கள் !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடலில் பயணிப்பவர்களுக்கு கடவுளின் கருணை ஒளிபோல இரளைக்கிழித்துக் காட்சி தருபவை கலங்கரை விளக்க வெளிச்சங்கள். கலங்கரைவிளக்கங்கள் மீதான தீராக்காதல் எம் சொந்த மண்ணிலிருந்து தொடங்கியது.

கடற்கரை வெளிச்சக் கோபுரமான கேப் டௌகாதோ (Kap Doukato) கீரேக்கத்தின் லெஃப்கடா (Lefkada) தீவின் தென்மேற்குப் புள்ளியில் அமைந்துள்ளது.

கிரேக்க கடற்படையினரின் பாதுகாவலராகவும், தார்மீகம், தூய்மை, தீர்க்கதரிசனம் மற்றும் கலைகளின் கடவுளாகவும் கருதப்பட் அப்பல்லோ கோயில் ஒன்று கி.மு 580ல் இந்த இடத்தில் இருந்ததாகச் சொல்லப்பட்ட போதிலும் அதன் எச்சங்கள் எதுவும் இன்று காணப்படவில்லை. அந்த இடத்தில், 1890 இல் வெள்ளை சுண்ணாம்புக் கல்லில் கட்டப்பட்ட இந்தக் கலங்கரை விளக்கக் கோபுரத்தின் உயரம் 14 மீட்டர்.

யாழ்ப்பாணத்தின் சப்த தீவுகளில் ஒன்றான அனலைதீவின் வடக்கு முனையில் உயர்ந்து நிற்கும் கலங்கரை விளக்கம் ஒன்றுண்டு. அந்த மண்ணிற்கான கடல்பயணங்களின் போது தென்படும் அதன் உயர்விலும் நிமிர்விலும் சில கணங்கள் எப்போதும் மனம் லயித்திருப்பதுண்டு. ஏனெனில் அது எம் சொந்த மண்ணின்உயர்வுகளில் ஒன்று....

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula