நத்தார் என்பது கிறிஸ்தவ மதத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும். "நத்தார்" என்ற தமிழ் வார்த்தை, "நற்றேர்" அல்லது "நற்காலம்" என்பதிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. இதற்கு "நல்ல நேரம்" அல்லது "திருநாள்" என்று பொருள் சொல்வதும் உண்டு.
ஆங்கிலத்தில் இதனை "Christmas" என அழைக்கின்றார்கள். இது "Christ's Mass" என்பதிலிருந்து தோன்றியதாகும். ஆனால் நத்தார் என்பதனை ' பிறப்பு' எனும் சொல்வழக்கில் ஆராய்ந்தால், nativitas லத்தீன் மொழிச் சொல்லடியில் இருந்து பிறந்ததாகச் சொல்லலாம். இதே சொல் வழக்கிலேதான் இத்தாலிய மொழியில் Natale என்றும், பிற ஐரோப்பிய மொழிகளில் சிலவற்றில் இதே தொனியிலும் அழைக்கப்படுகிறது.
நத்தாரின் ஆரம்பம், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருகிறது. அதனால்தான் இப் பண்டிகைக் காலத்தைப் பாலன்பிறப்பு எனவும் கொண்டாடுகின்றார்கள். முதலாவது நத்தார் கொண்டாட்டம் எப்போது தொடங்கியது என்பதைச் சரியாக கூற முடியவில்லை, ஆனால் கிபி 4ஆம் நூற்றாண்டில் (AD) இது ஐரோப்பாவில் பரவலாகக் கொண்டாடப்பட்டதாக அறியப்படுகிறது. கிறிஸ்தவ திருச்சபைகள் இயேசுவின் பிறந்த நாளை டிசம்பர் 25-ஆக அறிவித்தன. இது முன்னர் ரோம அரசு கொண்டாடிய "சூரியனின் பிறப்பு" (Sol Invictus) என்ற பண்டிகைக்கு இணையாக இருந்தது.
நத்தாரின் பண்டிகையை கிறிஸ்தவ மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஆரம்பித்தபோது, குறிப்பாக பாலன் பிறப்புகதைகள் (nativity scenes) தேவாலயங்களில் இசை மற்றும் பிரார்த்தனை என்று ஆரம்பமாகின. இன்று நத்தார் பல நாட்டு மரபுகள் சேர்ந்து உலகளாவிய சுதந்திரம்அன்பும் அமைதி, என ஒரு உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது. அதன் வடிவமும், மின் விளக்கு அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் மரம், பரிசுகள், மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுடன் மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்படும் பண்டிகையாக மாறியுள்ளது.
- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்