free website hit counter

பெட்டைக் கோழிக் கூவி...?

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பெட்டைக் கோழிக் கூவி பொழுது விடியுமா ? விடியும் எனச் சொல்லியிருக்கின்றார் இலங்கை இயக்குனர் நவயுகா குகராஜா.

நண்பரும் இயக்குனருமான லெனின் சிவம் அவர்களின் சமூகவலைத்தளப் பதிவொன்றின் மூலம் காண முடிந்த இந்த ஆவணக் குறும்படம், படைப்பாக்கத்தில் சிறப்பாக இருந்தது. பெண்களின் மீதான வன்முறைகளில், சமகாலத்தில் மிக அதிகமாகவுள்ள சமூக வலைத்தளங்களினூடான அவதூறு பரப்புதல், தாக்குதல் என்பதனை மையக் கருவாக வைத்து, அதற்கான விழிப்புணர்வுப் படமாக, தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் குறும்படம் சினிமாவிற்கான தொழில்நுட்பங்கள் சார்ந்த வகையிலும், நிறைவினைத் தருகிறது.

இலங்கையில் சிங்களச் சினிமா அபரிமிதமான வளர்ச்சி பெற்றுள் நிலையில், இலங்கைத் தமிழ் சினிமா படைப்பாளிகளின் முயற்சிகளுக்கான தளங்கள் இன்னமும் சரியாக அமையவில்லை அல்லது அதற்கான பார்வையாளர்களின் வட்டம் விரிவு பெறிவில்லை. இந்நிலையில் எல்லாச் சமூகங்களுக்குமான பொதுப் பிரச்சினை ஒன்றினை சிந்தையில் எடுத்து, அதனைச் சிதைவுறா வண்ணம் சிறப்பாக இரு மொழிகளிலும் படமாக்கியுள்ள இயக்குனர் நவயுகா குகராஜா பாராட்டுக்குரியவர்.

7 நிமிடங்களில் சொல்ல வந்ததைத் தெளிவான உத்திகளுடன் காட்சிப்படிமமாக்கியும், என்ன செய்யமுடியும் என்பதையும் சொல்லி, பெட்டைக் கோழி கொக்கரித்தாலும் பொழுது விடியும் என உறுதியுடன் நிறைவு செய்கையில், சிறந்ததொரு சினிமா படைப்பாளியாக நம்பிக்கை தரும் இயக்குனர் நவயுகா குகராஜாவிற்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

சிங்கள மொழியில் :


Pettaik Kozhi Koovi (2021) Documentary Short-film

Directed by: Navayuga Kugarajah

Director of photography: Madhuni Alahackone Pussewela

Production Designer: Joshuah Heby

Music: MC Raj

Art Director: Goabi Ramanan

Edited by: Joshuah Heby

Featuring:

Aishwarya S Varman

Poorvika Rasasingham

Costume Designer: Navayuga Kugarajah

Make-up: Madara Godage

Assistant Director: Chathurangi Rasikala Pathirage

DI and VFX: Joshuah Heby | AGNA Creatives

Artworks: Joshuah Heby

Translations: Nallathamby Krishnadas

Art assistant: Thiruvilangam Sritharan

Camera assistants: A. K. Suresh, Kushan Pradeep Perera

Lighting Technician and Sound Recordist: M. Arbith Sriyadi

Production Assistant: Dinesh Ramanayake

Driver: K. A. R. Ranasinghe

Produced by: Navayuga Kugarajah

In association with Thrii Productions

Special Thanks to

Umali Thilakaratne

Kaushalya Ariyarathna

Dharmaleela Kugarajah

Kalaatharshani Kugarajah

Lahiru Mudalige - Hari Global

Ranga Kalansooriya - IMS

Omar Rajarathnam - IMS

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula