free website hit counter

பசி நீங்க...!

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று உலக உணவு நாள் (World Food Day). தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் எனப் பாரதியும்,  வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலாரும், பசியையும், உணவையும், முன்னிறுத்திப் பாடியும், பேசியும் உள்ளார்கள்.

உணவு மனித அடிப்படைத்தேவைகளில் முக்கியமானது, அது சகலருக்கும் கிடைக்க வேண்டிய வகை செய்வதே மிக முக்கியமான மனித உரிமையும், மனித நேசிப்பும் ஆகும். 

இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும், இந்நாள் 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சர்வதேச உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO - Food and Agriculture Organization) உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

உலக உணவு நாளின் முக்கிய நோக்கம்:

    உணவுத்திறன், உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
    சர்வதேச அளவில் பசிக்கு எதிரான போராட்டத்தை முன்னேற்றுவது.
    அனைவருக்கும் சத்தான, பாதுகாப்பான மற்றும் மதிப்புமிக்க உணவு கிடைக்க வைப்பதை     உறுதி செய்யும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது.

உலக உணவு நாளின் முக்கிய அம்சங்கள்:

பசிக்கு எதிரான போராட்டம்:
        உலகத்தில் பசி என்பது இன்னும் ஒரு பெரிய சிக்கலாகவே இருந்து வருகிறது. 2020ஆம் ஆண்டின் முடிவில் உலகளவில் 690 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் போதிய அளவு உணவின்றி வாழ்ந்து வருகின்றனர். இதற்கான காரணங்களில் ஒன்று, பொருளாதார இடர்பாடுகளும், போர்களும், மற்றும் பருவநிலை மாற்றங்களும் ஆகும்.

சத்துணவு:
        உலக மக்கள் சுகாதாரத்திற்கான முக்கியமான அம்சம் சத்தான உணவுகளைப் பெறுவது. பலருக்கும் போதுமான உணவு கிடைத்தாலும், சத்தான உணவு கிடைப்பதில்லை. இது குணமடையாத நோய்கள் மற்றும் உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பருவநிலை மாற்றம் மற்றும் வேளாண்மை:
        பருவநிலை மாற்றம் வேளாண்மையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிக வெப்பநிலை, மழை மாறுபாடு, மற்றும் இயற்கை பேரிடர்கள் விவசாயிகளின் உற்பத்தியை பாதிக்கின்றன.

உறுதிப்படுத்தப்பட்ட வளர்ச்சி இலக்குகள் (SDGs):
        ஐ.நா. வின் 2030 வளம் வளர்ச்சி இலக்குகளில் (SDGs) "Zero Hunger" என்ற நோக்குடன், உலகின் பசியைக் குறைக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கை அடைவது குறிப்பிடத்தக்கது. 2030ம் ஆண்டுக்குள் உலகத்தில் இருந்து பசியை ஒழிக்க உழைப்பதுதான் இதன் முக்கிய குறிக்கோள். 
இந்த இலக்கு என்பது மிக இலகுவான ஒன்றல்ல. ஏனெனில், ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின்படி, உலகில் 10 பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். 

கடந்த 2023ஆம் ஆண்டு எடுக்கப்பெற்ற தரவுகளின்படி உலகமக்கிள் 11 பேரில் ஒருவர் பட்டினியால் உயிரிழப்பதாகத் தெரிய வருகிறது. இந்தப் புள்ளி விபரத்தின்படி, உலகில் 733 மில்லியன் மக்கள்வருடந்தோறும் உணவின்றி இறக்கின்றார்கள்.

இதேபோல் 2020ஆம் ஆண்டு  எடுக்கப்பெற்ற புள்ளிவிபரங்களின்படி, உலகளவில் 5 வயதுக்குட்பட்ட 5 குழந்தைகளில் ஒன்று வளர்ச்சி குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆரோக்கியமான எதிர்கால சமூகத்திற்கு இது பெரும் அச்சுறுத்தலாகும். 

உலக உணவு நாள் கொண்டாட்டங்கள்:

உலக உணவு நாளை முன்னிட்டு, உலகம் முழுவதும் பல நிகழ்வுகள், கருத்தரங்குகள், மற்றும் விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்படுகின்றன.
உலக உணவு நாளின் மையக் கருத்தாக, ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு தீம்கள் (themes) குறிக்கப்படுகின்றன. இவை அந்நாட்டு, சர்வதேச சமூகம், கல்வி நிறுவங்கள் மற்றும் அரசு-அரசு சாரா அமைப்புகளுக்கு பசிக்கு எதிரான விழிப்புணர்வு, செயல்பாடுகளை முன்னெடுக்கும் வாய்ப்புகளாகவும் உள்ளன.

2024ஆம் ஆண்டுக்கான உலக உணவுநாளின் தீம்: "சிறந்த வாழ்க்கைக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் உணவின்மை இல்லாத உரிமை" ஆகும்.

இந்த ஆண்டு தீம், அனைத்து மக்களுக்கும் சத்தான, பாதுகாப்பான, பல்வகையான, மற்றும் சமமாகக் கிடைக்கக்கூடிய உணவுகளைப் பெறுவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. 

உலகில் உணவுப் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான அடிப்படை மனித உரிமையாக உணவை அறிவிக்கிறது. பருவநிலை மாற்றம், பொருளாதார சிக்கல்கள், மற்றும் மோதல்கள் போன்ற பிரச்சினைகளால் பசிக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்​. நம்மிடத்தில் உள்ள உணவினை வீணாக்காமலும், பகிர்ந்து உண்ணுதலும் கூட இந்த நோக்கத்திற்கு நாம் ஆற்றக் கூடிய சிறப்பான பங்களிப்பாகும். 

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula