76 வது லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் தங்கச் சிறுத்தை விருதை வென்றது மிகத் தைரியமான ஈரானிய திரைப்படம்.
நேற்றுடன் முடிவடைந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் 76வது பதிப்பின் மிக உயரிய விருதான Pardo d’Oro (தங்கச் சிறுத்தை) விருதை ஈரானிய திரைப்பட இயக்குனர் Ali Ahmadzadeh தனது Mantagheye Bohrani (Critical Zone) திரைப்படத்திற்காக வென்றார்.
மத, இன, கலாச்சாரக் கொள்கைகளில் மாத்திரமில்லாது, தனி நபர் கருத்துச் சுதந்திரத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை உடைய ஈரானிய நாட்டின், தெஹ்ரான் தெருக்களில் அரச அனுமதியின்றி பல பொது இடங்களில் இரகசியமாக படம்பிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்தும் ஒரு நபரை பிரதான கதாபாத்திரத்தில் தொடர்கிறது.
அவர் ஒரு விமான பணிப்பெணை, தனது வாகனத்தில் தற்செயலாக ஏற்றுகிறார். இன்னொரு புறம் ஒரு தாய், போதைக்குள்ளாக்கப்பட்ட தனது மகனை காப்பாற்ற முயற்சிக்கிறார். இன்னொரு புறத்தில் மாற்றுப்பாலினம் கொண்ட பாலியல் தொழிலாளர்கள் தெருக்களில் சேவைக்காக காத்திருக்கின்றனர்.
இவரக்ளை மையமாக கொண்டு நகரும் இத்திரைக்கதையை உருவாக்கிய இயக்குனர் Ali க்கு, ஐரோப்பாவின் எந்த நாடுகளுக்கும் காலெடுத்து வைக்காதவாறு, ஈரானிய அரசினால், உள்நுழைவு அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது திரைப்பட தயாரிப்பாளர் Sina Ataeian Dea ஏற்கனவே தனது குடும்பத்துடன் ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளதால் அவரால் லொகார்னோ திரைப்பட விழாவுக்கு சமூகமளிக்க முடிந்தது.
" இந்த விருதை நான், Ali க்கு கொண்டு சென்று சமர்ப்பிக்கும் போது மகிழ்ச்சியடையப் போவதில்லை. இருவரும் இணைந்து இன்னமும் கோபப்படுவோம் என நினைக்கிறேன். ஐரோப்பிய அரசியல் தலைவர்களின் பாராமுகம் பற்றி ஏற்கனவே எமக்கு பல வருடங்களாக தெரியும். ஈரானிய அரசியல் நிலைமை பற்றியும், மக்கள் எழுச்சி பற்றியும், அவர்களால் எந்த ஆதரவும் நேரடியாக வழங்க முடியாது என்பதும், ஈரனிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதும் ஏற்கனவே எமக்கு தெரியும். ஆனால் ஐரோப்பிய மக்கள் சமூகத்தின் மீது இன்னமும் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் இன்னமும் கோபப்படமுடியும். உங்களால் உங்களது அரசுக்கு அழுத்தங்களை வழங்க முடியும். இந்த விருதை கோபத்தின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன்" என்கிறார் Sina Ataeian.
பெண்களுக்கான சமத்துவ உரிமை மற்றூம் சுதந்திரத்திற்காக கடந்த பல மாதங்களாக ஈரானிய மக்கள் எழுச்சி நடைபெற்று வரும் வேளையில், பல மனித உரிமை போராட்டக் காரார்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு அல்லது கடும் கண்காணிப்பில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லொகார்னோ திரைப்பட நடுவர் குழுவின் ஈரானிய சினிமாவுக்கான இப்பெரும் அங்கீகாரம் ஊடக கவனம் பெற்றுள்ளது.
பியாற்சே பெரும் முற்றத்தின் சிறந்த மக்கள் தேர்வு விருதை மறுபடியும் வென்றார் Ken Loach
இம்முறை லொகார்னோ திரைப்படவிழாவின் பியாற்சே திறந்த வெளி பெரும் முற்றத்தில் திரையிடப்பட்ட படங்களில், சிறந்த மக்கள் தெரிவாக பிரித்தானிய இயக்குனர் Ken Loach இன் The Old Oak தெரிவானது.
இங்கிலாந்தின், மனித உரிமை, சமூக விழுமியங்கள், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான அரச திட்டங்கள், அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து தனது திரைப்படங்கள் மூலமாக மாத்திரமில்லாது, ஊடகங்களிலும் குரல் கொடுத்துவரும், புகழ்பெற்ற இயக்குனர் Ken Loach, 86 வயதில் உருவாக்கிய திரைப்படம் இது.
இவரது முன்னைய திரைப்படம் I, Daniel Blake, 2016 இல் ஏற்கனவே இதே பியாற்சே கிராண்டே பெரு முற்றத்தில் மக்கள் விருதை வென்றிருந்தது. அதோடு The Old Oak திரைப்படம், இம்முறை கேன்ஸ் திரைப்படவிழாவிலும் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டிருந்தது.
இங்கிலாதின் ஒரு கிராமத்தில், நலிந்த, சுரங்கத் தொழிலாளர் சமூகத்தின் கடைசி ஒன்று கூடும் இடமாக ஒரு Pub. அக்கிராமத்திற்கு வரும் சிரிய அகதிகள் குடும்பங்கள், அந்த Pub இனை, அனைவருக்கும் உதவி செய்யும் இடமாக, இலவச உணவு சமைத்து பரிமாறூம் இடமாக மாற்ற முயற்சிக்கின்றனர். நலிந்து போன, தத்தமது அரசினால் கைவிடப்பட்ட இரு சமூகங்களால், ஒரே கிராமத்தில் ஒன்றிணைந்து வாழ முடிகிறதா, அவர்களுக்கான எதிர்பார்ப்புக்கள் என்ன, வேற்றுமைகள் என்ன என்பதனை மையகாக கொண்டு உருவாக்கப்பட்டது இத்திரைப்படம்.
அதிகார வர்க்கத்திற்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடுகளாக விருதுகள் வென்ற திரைப்படங்கள்!
இம்முறை விருதுப்பட்டியலில் நடுவர் குழுவின் சிறப்பு பரிந்துரை திரைப்படமாக ரோமானிய இயக்குனர் Radu Jude இன் NU AȘTEPTA PREA MULT DE LA SFÂRȘITUL LUMII (DO NOT EXPECT TOO MUCH FROM THE END OF THE WORLD) வென்றது. காடுவெட்டுவதால் எந்தவொரு சுற்றுப் புறச் சூழல் மாசும் இல்லை. காடு வெட்டும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்துக்கள் அவர்களது தவற்றால் தான் ஏற்படுகிறது. நாம் நன்றாக அவர்களை கவனித்துக் கொள்கிறோம் என விளம்பரம் செய்ய நினைக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒன்றின், விளம்பர உருவாக்கத்தை பற்றி அதில் உள்ள முரண்நகைகளை பற்றி மிக நக்கலாக, ஆனால் மிக யதார்த்தமாக உருவாக்கப்பட்ட திரைப்படம் இது.
சிறந்த இயக்குனருக்கான விருதை உக்ரேனிய திரைப்படவியலாளர் Maryana Vroda தனது Stepne திரைப்படத்திற்காக வென்றார்.
இம்முறை லொகார்னோ திரைப்படவிழாவில் மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பல வளர்முக சினிமாக்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்த போதும் முக்கிய விருதுகளை வென்ற திரைப்படங்கள் ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியிலிருந்த நாடுகளாக அல்லது, தெற்கு, தென் கிழக்கு ஐரோப்பாவின் நலிந்த சினிமாக்களை, கட்டுப்பாடுகள் உடைய சினிமாக்களை பிரதிபலிக்கும் நாடுகளிலிருந்து உருவானவை. அதோடு ஆளும் அதிகார வர்க்க அரசு மற்றும் பன்னாட்டு அதிகார, முதலாலித்துவ கொள்கைகள் உடைய சமூகங்களுக்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடாக உருவான திரைப்படங்கள்.
ஆரோக்கியமான, கருத்துச் சுதந்திரம் மிக்க, அடிப்படை மனித உரிமை அவசியமான ஒரு எதிர்கால உலகும், பன்முகங்களையும் அதன் கலாச்சார விழுமியக் கூறுகளையும் பிரதிபலிக்கும் நல்லொதொரு சினிமாவும் தேவை என்பதனை மறுபடியும் லொகார்னோ திரைப்பட விழாவின் நடுவர் குழுவினர் இத்திரைப்படத் தெரிவுகள் மூலம் ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளனர்.
லொகார்னோ திரைப்பட விழாக்குழுவினரால் உருவாக்கப்பட்ட Best of Locarno 76 :
லொகார்னோ திரைப்படவிழாவில் விருதுகளை வென்ற திரைப்படங்களின் பட்டியல் :
Concorso internazionale
Pardo d’oro, Grand Prize of the Festival of the City of Locarno to the best film
MANTAGHEYE BOHRANI (CRITICAL ZONE) by Ali Ahmadzadeh, Iran/Germany
Special Jury Prize of the Cities of Ascona and Losone
NU AȘTEPTA PREA MULT DE LA SFÂRȘITUL LUMII (DO NOT EXPECT TOO MUCH FROM THE END OF THE WORLD) by Radu Jude, Romania/Luxembourg/France/Croatia
Pardo for Best Direction of the City and Region of Locarno
Maryna Vroda for STEPNE, Ukraine/Germany/Poland/Slovakia
Pardo for Best Performance
Dimitra Vlagopoulou for ANIMAL by Sofia Exarchou, Greece/Austria/Romania/Cyprus/Bulgaria
Pardo for Best Performance
Renée Soutendijk for SWEET DREAMS by Ena Sendijarević, Netherlands/Sweden/Indonesia/Reunion
Special Mention
NUIT OBSCURE - AU REVOIR ICI, N'IMPORTE OÙ by Sylvain George, France/Switzerland
Concorso Cineasti del presente
Pardo d’oro Concorso Cineasti del presente to the best film
HAO JIU BU JIAN (DREAMING & DYING) by Nelson Yeo, Singapore/Indonesia
Best Emerging Director Award of the City and Region of Locarno
Katharina Huber for EIN SCHÖNER ORT, Germany
Special Jury Prize CINÉ+
CAMPING DU LAC by Éléonore Saintagnan, Belgium/France
Pardo for Best Performance
Clara Schwinning for EIN SCHÖNER ORT by Katharina Huber, Germany
Pardo for Best Performance
Isold Halldórudóttir and Stavros Zafeiris for TOUCHED by Claudia Rorarius, Germany
Special Mentions
EKSKURZIJA (EXCURSION) by Una Gunjak, Bosnia-Herzegovina/Croatia/Serbia/France/Norway/Qatar
NEGU HURBILAK by Colectivo Negu, Spain
First Feature
Swatch First Feature Award
HAO JIU BU JIAN (DREAMING & DYING) by Nelson Yeo, Singapore/Indonesia
Pardi di domani
Concorso Corti d’autore
Pardino d’oro Swiss Life for the Best Auteur Short Film
THE PASSING by Ivete Lucas, Patrick Bresnan, USA
Special Mention and Short Film candidate of the Locarno Film Festival for the European Film Awards
BEEN THERE by Corina Schwingruber Ilić, Switzerland
Concorso internazionale
Pardino d’oro SRG SSR for the Best International Short Film
EN UNDERSØGELSE AF EMPATI (A STUDY OF EMPATHY) by Hilke Rönnfeldt, Denmark/Germany
Pardino d’argento SRG SSR for the International Competition
DU BIST SO WUNDERBAR by Leandro Goddinho, Paulo Menezes, Germany/Brazil
Pardi di domani Best Direction Award – BONALUMI Engineering
Eric K. Boulianne for FAIRE UN ENFANT, Canada
Medien Patent Verwaltung AG Award
NEGAHBAN (THE GUARD) by Amirhossein Shojaei, Iran
Special Mention
THE LOVERS by Carolina Sandvik, Sweden
Concorso nazionale
Pardino d’oro Swiss Life for the Best Swiss Short Film
LETZTE NACHT by Lea Bloch, Switzerland
Pardino d’argento Swiss Life for the National Competition
NIGHT SHIFT by Kayije Kagame, Hugo Radi, Switzerland
Best Swiss Newcomer Award
LETZTE NACHT by Lea Bloch, Switzerland
Pardo Verde Ricola
ČUVARI FORMULE (GUARDIANS OF THE FORMULA) by Dragan Bjelogrlić, Serbia/Slovenia/Montenegro/ North Macedonia
Special Mentions
PROCIDA, film made by the participants of Procida Film Atelier, Italy
VALLEY PRIDE by Lukas Marxt, Austria/Germany