free website hit counter

ஜேர்மனியில் ஆட்சி பீடமேறும் "போக்குவரத்து ஒளி" கூட்டணி !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜேர்மனி, ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. பரந்த நிலப்பரப்பும், நிறைந்த மக்கட் தொகையும், சிறந்த பொருளாதார வணிக வளங்களும் மிக்க நாடு.

ஜேர்மனியர்கள் எனும் அடையாளத்துள் வந்துவிடக் கூடிய ஒரு மொழி, ஓரினச் சமூகம். ஆனாலும் அடுத்த ஆட்சித் தலைமையும் பொறுப்பும், ஒரு கூட்டாட்சியாக அமைகிறது.

அரசியலில் கூட்டணிகளும், கூட்டாட்சியும் அமைவது இயல்பானதுதான். ஆனால் ஜேர்மனி போன்ற ஒரு நாட்டில், இவ்வாறான ஆட்சிப் பங்கீடு என்பது, யாவர்க்குமான கருத்துரிமையும், புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்பும் மிக்க நவீன அரசியற்கலாச்சாரமாகவும், காணலாம், அல்லது இழுபறியான கூட்டாட்சி எனவும் கொள்ளலாம். ஆனால் ஜேர்மனியில் அமையவிருக்கும் புதிய ஆட்சி முதல்வகையினைச் சேர்ந்ததாகக் கருதமுடியும். அதற்கான காரணங்களில் ஒன்று அவர்கள் இந்தக் கூட்டணிக்கு வைத்திருக்கும் பெயர், "போக்குவரத்து ஒளி" கூட்டணி.

கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி கூட்டாட்சித் தேர்தல்கள் நடந்து இரண்டரை மாதங்களுக்குப் பிறகு, SPD, பசுமைக் கட்சி மற்றும் FDP ஆகிய மூன்று கட்சிகளின் வண்ணங்களில் 'போக்குவரத்து விளக்கு' கூட்டணி எனப் பெயரிட்டு, பேர்லினில் ஒரு பொது விழாவில் முறைப்படி தங்கள் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 

மூன்று இணைவுச் சாத்தியமில்லாத கட்சிகள், தாம் இணையக் கூடிய புள்ளிகளில் கருத்தொருமித்து, ஜேர்மன் கூட்டாட்சி அரசாங்கத்தில் முதல் வகையான கூட்டாண்மையை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளது. இதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட காலம் பத்து வாரங்களுக்கும் அதிகமான செயல்முறை, மற்றமு; 170க்கும் அதிகமான பக்கங்களில் விரிவான உடன்படிக்கை. ஆயினும், அதன் முடிவு ஆச்சரியத்தக்கதாகும்.

சாலைப் போக்குவரத்தில் ' ட்ராபிக் சிக்னல் ' எவ்வாறு நமது போக்குவரத்தை சீரமைக்கிறதோ, அதேபோன்று ஜேர்மனின் அரசியற்பாதையினை இந்தப் ( Traffic light coalition ) புதிய கூட்டணி, சீரமைத்து நாட்டினை முன்னறேத்திற்கான பாதையில் இட்டுச் செல்லும் என கூட்டணித் தலைவர்கள் உறுதிபடக் கூறியுள்ளார்கள்.

SPD கட்சியின் Olaf Scholz நாளை புதன்கிழமை ஜெர்மனியின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மேலும் அவரது புதிதாக இறுதி செய்யப்பட்ட அமைச்சரவையும், உடன் பதவியேற்கவுள்ளது. தொடர்ந்து 16 ஆண்டுகாலமாக ஜேர்மனியின் அதிபராக இருந்த மூத்த தலைவர் ஏஞ்சலா மேர்க்கெல் அவர்களது சகாப்தத்தின் முடிவில் தோன்றியுள்ள புதிய கூட்டணி அரசியலின் தலைவராக ஓலாஃப் ஸ்கோல்ஸ் பதவிறற்கின்றார்.

இன்று செவ்வாய்கிழமை காலை பேர்லினில் நடந்த விழாவில் பேசிய ஷோல்ஸ், "நாங்கள் ஒரு புதிய அரசாங்கத்திற்குப் புறப்பட்ட காலை" என்று அறிவித்தார்.
பசுமைக் கட்சியின் இணைத் தலைவரும், புதிதாக உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி அமைச்சகத்திற்கு தலைமை தாங்குபவருமான, ராபர்ட் ஹேபெக், அவர்கள், ஜெர்மனிய மக்களுக்கான அரசாங்கம் இதுவெனவும், ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்துறை நாடு மற்றும் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரத்தில் பருவநிலை நடுநிலை மற்றும் செழிப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கொண்டுவருவதற்கான கூட்டு சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என்றும் வலியுறுத்தினார்.

"20கள் புதிய தொடக்கங்களின் காலமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மனிதகுலத்தால் ஏற்படும் காலநிலை மாற்றத்தைத் தடுக்கக்கூடிய மிகப்பெரிய தொழில்துறை நவீனமயமாக்கலை முன்னோக்கி நகர்த்துவோம் என நாளை ஜேர்மனின் புதிய அதிபராகவுள்ள 63 வயதான ஸ்கோல்ஸ் அறிவித்துள்ளார்.

அத்துடன் சமத்துவச் சொல்லாட்சியை நடைமுறைக்குக் கொண்டு வந்து , நாட்டின் முதல் பாலின சமச்சீர் அமைச்சரவையை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டார். இதில் முக்கிய பாதுகாப்பு இலாகாக்களில் பெண்களுக்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. "அதிகாரத்தில் பாதி பெண்களுக்கு சொந்தமானது," என்று தன்னை ஒரு "பெண்ணியவாதி" என்று விவரிக்கும் ஷோல்ஸ் கூறியடிபடியே அமைச்சரவையை உருவாக்கியுள்ளார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் மத்திய-இடதுசாரிகள் அதிகாரத்திற்குத் திரும்புவது, ப்ரெக்ஸிட்டிலிருந்து இன்னும் தத்தளித்துக்கொண்டிருக்கும் ஒரு கண்டத்தின் சமநிலையை மாற்றக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிறையவே உள்ளது.

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula