free website hit counter

' உலா ' உங்களது... !

நாம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அன்புறவுகளுக்கு வணக்கம் !

எல்லோருக்கும் தங்கள் எல்லைகளுக்குள்ளான விடயங்களே புரியும். உலகின் எல்லாத் திசைகளிலும் நடைபெறுவதை அவதானிக்கும் பத்திரிகையாளனுக்கு மட்டுமே எல்லைகள் தாண்டியும் விடயங்களைப் புரிந்து கொள்ள இயலும்.

ஒரு நல்ல செய்தியாளனுக்கு சாதாரண மனிதர்கள் கண்ணில படாத விடயங்களைக் கண்டு பிடிக்கத் தெரியணும். ஒரு விடயத்தின் மீதான விரிவான பார்வை அவனுக்கு மட்டுமே சாத்தியமாகும்.

புதியவைகளை மற்றவர்களுக்கு அறியத் தரவேண்டுமாயின் அவை குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஞானத்தினை எப்போதும் நமக்கு நாமே போதித்துத் தொடரும் பயணத்தில் மற்றுமொரு புது முயற்சிதான் "உலா".

எமது வாழ்வின் சுவடுகளை, வரலாற்றின் பதிவுகளை, ஆவணங்களாக, அழகான சித்திரங்களாக, இனிக்கும் இலக்கியமாக, இன்னும் பல புதிய வடிங்களாகப் படைத்திட விரும்பும் எல்லோரையும், வாருங்கள் என வாஞ்சையோடு அழைக்கின்றோம். உங்கள் எண்ணங்களோடு நாற்திசையும், நலமுடனே பவனி வர, உங்களுக்கு உதவிடும் " உலா " அன்ட்ரோய்ட் இயங்கு தள செல்லிடப் பேசிகளுக்கான செயலியாக " உலா" வின் முதலாவது பதிப்பினை இன்று வெளியிட்டுள்ளோம்.வெகு விரைவில் அப்பிள் இயங்கு தள செல்லிடக் கைபேசிகளுக்கான பதிப்பினையும் வெளியிடவுள்ளோம்.

உங்கள் ஜன்னல்களுக்கு அப்பால் விரியும் புதிய உலகினை, விரல்களின் அசைவில் விரும்பிப் படிக்கவும், கண்டு மகிழவும் இலகு வழியில் உதவிடும் "உலா"
 
இணைப்பினில் அழுத்தி, செயலியை உங்கள் செல்பேசிகளில் நிறுவி, விளம்பரங்கள், ஆபாச ஒட்டிகளின் இடையூறுகள் ஏதுமற்று, நல்ல கருத்துக்களையும், காட்சிகளையும், கண்டு பயனுறலாம்.
 
இந்த இணைப்பில் அழுத்தி, " உலா " செயலியை உங்கள் கைபேசிகளில் ( Install ) தரவிறக்கிக் கொண்டபின் உங்கள் பேஸ்புக் கணக்கின் மூலம் அல்லது ஈ மெயில் முகவரியுடன் உள்ளீடு செய்து கொள்ளலாம்.

எப்போதும் போல் உங்கள் மேலான ஆதரவினை நல்கி எங்களோடு இணைந்திருங்கள். இன்னும் பல செய்திடலாம் இனிதே பல ஆற்றிடலாம்...

-4தமிழ்மீடியா குழுமம் சார்பாக,
இனிய அன்புடன்
மலைநாடான்

No comments

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: