ஆழ்வார் தமிழ்ரசனை
சம்சார சாகரம் என்னும் துன்பக் கடலிலிருந்து நம்மை ஆட்கொள்ளும் முக்தி தரும் முத்தனார் அவர், வெற்றித் தரும் முகுந்தனார் அவர். அப்படி பட்டவர் நம்முள் குடிகொண்டார். நம்மை காக்கும் பொறுப்பு அவருடையது, இதை அறிந்தும் துன்பக்கடலில் மூழ்கலாமா மனமே? அவன் நம்மை ஆட்கொள்வான். துயரப்படாதே மனமே என படிக்கும் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையைத் தருகிறார். இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்அச்சுவை பெறினும் வேண்டேன் என்பது ஆழ்வார்கள் அனுபவித்துச் சுவைத்த தமிழரசனை.
																						
     
     
    
     
     
    
     
     
    
     
     
    